search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டூவர்ட் பிராட்"

    மை காட், என்னே அவள் அழகு, ஸ்டூவர்ட் பிராட்டை முதல்முறையாக பார்க்கும்போது இப்படித்தான் தோன்றியது என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
    இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட். 36-வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2002-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். ஸ்டூவர்ட் பிராட் 2006-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.

    இருவரும் டெஸ்ட் அணியில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஜோடியாக திகழ்கின்றனர். இருவரும் (ஆண்டர்சன்  575, ஸ்டூவர்ட் பிராட் 437) இணைந்து டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டுக்கள் மேல் சாய்த்துள்ளனர்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் ‘Bowl. Sleep. Repeat’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் ‘‘நாங்கள் இருவரும் இணைந்து ஆயிரம் விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியது நம்பமுடியாத விசித்திரமானதாகும். எங்களை நாங்கள் போட்டியாக பார்த்தது கிடையாது. ஏனெனில், எங்களுடைய திறமை முற்றிலும் மாறுபாடானது.



    ஸ்டூவர்ட் பிராட் பவுன்ஸ் மற்றும் பந்தின் சீம்-ஐ சரியான பயன்படுத்தி மூவ் செய்வதில் வல்லவர். நான் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்வேன்.

    முதல் முறையாக அவர் எங்களுடைய வீரர்கள் அறைக்கும் வரும்போது, அவரது நீலக்கலர் கண்கள், பொன்னிறமான நீண்ட கூந்தல், மிக வசீகரமான உடல் ஆகியவற்றை வைத்து, ‘மை காட், என்னே அவள் அழகு’’ என்று தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார்.
    யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 3 சிக்சர்கள் அடித்ததும், 2007-ல் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்பட்டு விடுமோ? என உணர்ந்தேன் என்ற சாஹலுக்கு பிராட் பதிலடி கொடுத்துள்ளார். #IPL2019
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது சாஹல் வீசிய ஓவரை யுவராஜ் சிங் எதிர்கொண்டார்.

    இதில் முதல் மூன்று பந்துகளையும் யுவராஜ் சிங் சிக்சருக்கு தூக்கினார். ஆனால், 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். போட்டி முடிந்த பிறகு இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘யுவராஜ் சிங் மூன்று சிக்சர்கள் அடித்தபோது, நான் ஸ்டூவர்ட் பிராட் போன்று உணர்ந்தேன்’’என்று தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டூவர்ட் பிராட் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘10 வருடத்தில் நான் 437 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளேன். இந்த விஷயத்திலும் என்னைப் போன்று உணர்வார் என்று நம்புகிறேன்’’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

    2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய பந்தில் யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதன்பின் ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்தின் முக்கியமான இரண்டு பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சாஹல் இன்றும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். #WIvENG
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்கள் நடக்க இருக்கின்றன.

    முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து விளையாடியது. இந்த ஆட்டம் நேற்றுமுன்தினம் தொடங்கி நேற்று முடிவடைந்தது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 317 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 203 ரன்னில் சுருண்டது.

    இதில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 56-வது ஓவரின் 5-வது பந்தில் ஜோசப்பையும், கடைசி பந்தில் கம்மின்சையும், 57-வது ஓவரின் முதல் பந்தில் சார்லஸையும் வீழ்த்தினார். 
    இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. காலே, பல்லேகெலேயில் நடைபெற்ற போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3-வது டெஸ்ட் நாளைமறுநாள் (23-ந்தேதி) கொழும்பில் தொடங்குகிறது.

    முதல் இரண்டு போட்டிக்கான ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் தயார் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள்தான் அசத்தினார்கள்.

    கொழும்பு டெஸ்டிற்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில்தான் தயார் செய்யப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், சாம் குர்ரான் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டர்சனுக்குப் பதிலாக ஸ்டூவர்ட் பிராட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாம் குர்ரானுக்குப் பதில் பேர்ஸ்டோவ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட்டிற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார். #SLvENG
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 4-1 என கைப்பற்றியது. அக்டோபர்- நவம்பர் மாதத்தில் இங்கிலாந்து அணி இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    அலஸ்டைர் குக் ஓய்வு பெற்றதால் இங்கிலாந்து அணி தொடக்க பேட்ஸ்மேனை தேட வேண்டியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணி தொடக்க பேட்ஸ்மேனை இல்லாமல் திணறி வந்தது.

    இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜென்னிங்ஸ், ஆசிய கண்டத்தில் சரியாக விளையாடாத பிராட் ஆகியோரை இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கக் கூடாது என்று கெவின் பீட்டர்சன் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து கெவின் பீட்டர்சன் கூறுகையில் ‘‘433 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருக்கும் 32 வயதான ஸ்டூவர்ட் பிராட், சொந்த மண்ணை விட்டு வெளியில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியது கிடையாது.



    கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. அவரை இலங்கை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கினால், நான் ஆச்சர்யம் அடைய மாட்டேன்.

    இந்தியாவிற்கு எதிராக 9 இன்னிங்சில் ஜென்னிங்ஸ் 163 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவரை நீக்க வேண்டும். ரோரி பர்ன்ஸ் மற்றும் ஜேசன் ராய் ஆகியோரை தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறக்க வேண்டும்’’ என்றார்.
    இந்தியாவிற்கு எதிராக அலஸ்டைர் குக் 294 ரன்கள் அடித்ததே எனக்கு மிகவும் பிடித்தமான இன்னிங்ஸ் என ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். #AlastairCook
    இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்ஸ்மேன் அலஸ்டைர் குக் ஓவல் டெஸ்டோடு ஓய்வு பெற இருக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைத்த குக், 12 வருட ஆட்டத்திற்குப் பிறகு ஓய்வு பெறுகிறார்.

    குக் அறிமுகமான ஓராண்டிற்குப் பிறகு அறிமுகமானவர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். குக் 161 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பிராட் 123 போட்டிகளில் விளையாடியுள்ளார். 123 போட்டிகளிலும் குக் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

    அலஸ்டைர் குக் அடித்த சதத்திலேயே இந்தியாவிற்கு எதிராக 294 ரன்கள் அடித்ததுடன் எனக்கு மிகவும் பிடித்தமான ஆட்டம் என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பிராட் கூறுகையில் ‘‘எனக்கு மிகவும் பிடித்தமான சதம் எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவிற்கு எதிராக 2011-ல் அடித்த 294 ரன்களாகும். ஏனென்றால், அவரது சதம் எங்களுடைய பந்து வீச்சாளர்களுக்கு இரண்டரை நாட்கள் ஓய்வை கொடுத்தது.

    ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வருடம் ஓவலில் நடைபெற்ற போட்டியில் அவர் பேட்டிங் செய்ததை மிகவும் ரசித்து பார்த்தேன்’’ என்றார்.
    முதல் இரண்டு டெஸ்டில் 250 ஓவர்கள் வீசினால், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது நடைமுறைக்கு ஒத்து வராதது என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளைமறுநாள் புதன்கிழமை (ஆகஸ்ட்-1) தொடங்குகிறது. ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 42 நாட்களில் நடக்கிறது.

    42 நாட்களில் (6 வாரம்) ஐந்து டெஸ்ட் என்பது அடுத்தடுத்து விளையாடுவதற்கு சமம் என்று வீரர்கள் கருதுகிறார்கள். இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் சிம்ம சொப்பனமாக இருப்பார்கள் என்று கருதப்படுகிறது.

    அதேவேளையில் 36 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 6 வாரங்கள் விளையாடாமல் இருந்தார். 32 வயதாகும் ஸ்டூவர்ட் பிராட் மூட்டு வலி காரணமாக சிகிச்சை மேற்கொண்டார். தற்போது இந்திய தொடருக்காக தயாராகி வருகிறார்கள்.

    பந்து வீச்சு பளு காரணமாக நீண்ட தொடரான இதில் இரண்டு பேருக்கும் சுழற்சி (rotated) முறையில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் இரண்டு டெஸ்டில் தலா 250 ஓவர்கள் வீசப்பட்டால் ஐந்து டெஸ்டில் விளையாடுவது சாத்தியமற்றது என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் ‘‘நாங்கள் தொடர்ந்து விளையாடுவது போட்டியின் டாஸ், ஆடுகளம் மற்றும் வேலைப்பளு ஆகியவற்றைச் சார்ந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தலா 250 ஓவர்கள் வீசப்பட்டால், வேகப்பந்து வீச்சாளர்கள் 6 வாரத்தில் ஐந்து போட்டிகளில் விளையாடுவார்கள் என்பது நடைமுறைக்கு ஒத்துவராதது.

    ஆனால், ஒரு டெஸ்டில் 80 அல்லது 60 ஓவர்களில் ஆல்அவுட் ஆக்கிவிட்டால், அதன்பின் பந்து வீச்சாளர்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்படும்.

    ஆடுகளம் அதிக அளவில் டர்ன் ஆனால் ஸ்பின்னர்கள் அதிக அளவிலான ஓவர்களை வீசுவார்கள். அப்போது வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக அளவில் ஓவர்கள் வீச வேண்டிய நிலை ஏற்படாது. அதேவேளையில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது என்றால் வேகப்பந்து வீச்சுக்கு அதிக வேலை இருக்கும்’’ என்றார்.
    இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் இந்தியா தொடருக்கு தயாராகி விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்தியா - இங்கிலாந்து இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்பின் வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது.

    பின்னர் முக்கியத்தும் வாய்ந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இந்த பேட்ஸ்மேனுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் கவுன்ட்டி போட்டியில் விளையாடும்போது பிராட்டிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன் தயாராகி விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து பிராட் கூறுகையில் ‘‘தலைசிறந்த ஸ்பெஷலிஸ்ட் மற்றும் பல்வேறு ஸ்கேன் பரிசோதனைகளுக்குப் பிறகு முழங்காலில் ஏற்பட்டுள்ள தசைநார் பிரச்சினைக்கு சில ஊசிகள் போட்டுள்ளேன். எனக்கு ஐந்து நாட்கள் ஓய்வு தேவை. அதன்பிறகு ஓட திட்டமிட்டுள்ளேன். 22-வந்தேதி நடைபெறும் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.

    ஒருவேளை கவுன்ட்டி போட்டியில் மீண்டும் காயம் ஏற்பட்டால் இந்திய தொடரில் பிராட் விளையாடுவது சிக்கலை ஏற்படுத்தும்.
    ×